Tuesday, July 08, 2014

ரிலயன்ஸ் டேட்டா கார்டு

இந்த ரிலயன்ஸ் டேட்டா கார்டு மாதிரி ஒரு படு மோசமான  டேட்டா கார்டு உலகத்துலேயே வேறே எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன். இந்த Netconnect+ டேட்டா கார்டின் அதிக பட்ச வேகம் 3.1 MBPS. ஆனால், எத்தனை முறை முயற்சி செய்தாலும் 110 KBPS வேகத்துக்கு மேலே போகவே இல்லை. இப்படி ஒரு படு மோசமான இணைய சேவை கொடுக்கறதுக்கு பதிலா பேசாம இழுத்து மூடிட்டு போகலாம். ஏதோ இந்த டேட்டா கார்டு தான் இப்படி இருக்குதுன்னு பார்த்தால், இவங்களோட GSM மொபைல் சேவை அதுக்கும் மேலே படு மட்டமா இருக்கு. மொபைல் எடுத்து பேசினா முதல் 10 செகண்ட் வரைக்கும் தான் நல்லா கேட்கும். அதுக்கு அப்புறம் கிணத்துல இருந்து குட்டிச்சாத்தான் பேசற மாதிரி கேட்கும்.  நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்லை எல்லோருக்குமான்னு அக்கம் பக்கம் விசாரிச்சு பார்த்ததுல  இந்த ரிலயன்ஸ் டேட்டா கார்டு உபயோகிச்சு நம்மள மாதிரியே நொந்து நூடுல்ஸ் ஆனவங்க நெறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதுஎதுக்கு இப்படி பொறுப்பில்லாம ஒரு பிசினஸ் பண்றாங்களோ தெரியவில்லை!

0 comments:

Post a Comment