Wednesday, July 09, 2014

நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?




















டிவிட்டர்ல ரொம்ப நாளைக்கு முன்னால அது எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்னு போனேன். அங்க போயி பார்த்தால், ஏதோ ஒரு வெப்சைட்ல   இருந்து இலவசமா SMS அனுப்பறமாதிரி ஒரு ஃபீலிங். 140 எழுத்துக்கள் என்ற  கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற  கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள். எனக்கு SMS அனுப்பறதே பிடிக்காது. இதுல அங்கே போயும் அதையே தான் செய்யணுமா? அதை விட பேஸ்புக் எவ்வளவோ தேவலாம்னு தோணிச்சு.  டிவிட்டர்ல இருக்கறவங்க என்ன பேசிக்கறாங்க,  யார் கூட பேசிக்கறாங்க, அப்புறம் அந்த ஹாஷ் டேக், இதெல்லாம் சத்தியமா  ஒண்ணுமே  புரியல. விட்டா போதும்ன்னு அப்போவே  ஓடோடி வந்துட்டேன்.  அதோட டிவிட்டரை மறந்துட்டு பேஸ்புக்லேயே ஐக்கியமாகிட்டேன். ஏறக்குறைய ஆயிரம் நண்பர்கள், ஒரு நாற்பது குரூப்புகள், நூறு இருநூறு பக்கங்கள், என்று அங்கேயே செட்டில்  ஆகிவிட்டேன்.

 திடீர்ன்னு ஒரு நாள், "உங்களைக் காணாமல் தவிக்கிறோம், உடனடியாக எங்கிருந்தாலும் வருக" அப்படிங்கற மாதிரி, கிராமத்துல மைக் செட்ல சொல்லுவாங்களே "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்" அந்த மாதிரி டிவிட்டர்ல இருந்து இ-மெயில் அடிக்கடி என் இன்பாக்ஸ்க்கு வருது.  நான்தான் அங்க அக்கௌண்ட் இருக்கறதையே மறந்து ரொம்ப நாளாச்சே?  அந்த இ-மெயில்ல Suggestions for you to follow ன்னு ஒரு சில பிரபலங்களோட லிஸ்ட் கொடுத்துருக்காங்க.  அந்த லிஸ்ட்ல அபிஷேக் பச்சன் கூட இருக்காரு. இது என்னடா வம்பா போச்சே... நம்மள ஆசை காட்டி அழைக்கறாங்களே... போகலாமான்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான் அங்க இருந்த சில டிவிட்டர்களுக்கும் ஒரு பிரபலத்துக்கும் "பிரச்சினை"  வந்து ஒரே பரபரப்பா இருந்துச்சு. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நினச்சு அதோட டிவிட்டரை ஓரேயடியா மறந்துட்டு, நமக்கு பேஸ்புக் தான் எப்போவும் சிறந்ததுன்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் இங்கே பேஸ்புக்லேயே சந்தோஷமா தானே  இருக்கேன்?  என்னை எதுக்குப்பா டிவிட்டர்க்கு வரச் சொல்லி அங்க இருக்கற பிரபலங்களோட மாட்டி விடறீங்க?  மனுஷன் நிம்மதியா இங்கேயே இயற்கை விவசாயம், கத்தரிக்காய், டெங்கு காய்ச்சல், பவர்-கட், இன்வெர்ட்டர், சோலார் பேனல்... இப்படி ஏதாவது பிரச்சினை வராத ஒரு ஸ்டேட்டஸ் தினமும் போட்டுட்டு நிம்மதியா இருந்துக்கறேனே...  என்னை விட்டுங்கப்பா !!!

# பேஸ்புக் தான் எப்போவும் நல்லது

0 comments:

Post a Comment