Thursday, July 10, 2014

ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்காவுக்குப் போறீங்க?
















இந்த இங்கிலீஷை தாய் மொழியா படிச்சவங்களுக்கு இருக்கற ஒரு நினைப்பு என்னன்னா, உலகத்துல எங்க போனாலும் நாங்க பிழைச்சுக்குவோம் அப்படிங்கறது தான்.  அதனால அவங்களுக்கு மற்ற மொழி பேசறவங்களைக் கண்டால் கொஞ்சம் இளக்காரம் தான்.

அதை வெளிக்காட்டுற மாதிரி "இங்கிலீஷ்.. விங்கிலீஷ்"  என்ற திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்,  "ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்காவுக்குப் போறீங்க?" என்று அமெரிக்க அதிகாரி கேட்டதும், நீங்க தமிழ் தெரியாம இங்கே இல்லையா என்று பதிலுக்குக் கேட்கிறார் இந்திய அதிகாரி!

இங்கே வரும் அமெரிக்கன்ஸ் எல்லாம் ஹிந்தியோ, தமிழோ தெரிஞ்சுகிட்டா வராங்க? ரொம்ப தான் பந்தா பண்றாங்க இந்த அமெரிக்கன்ஸ்! நமக்காவது இந்தியான்னு ஒரு அழகான பெயர் இருக்கு. அவங்க நாட்டுக்கு உருப்படியா ஒரு பேரு இருக்கா? அவங்கல்லாம் ஆசியாவுல இருந்தா ஆசிய ஐக்கிய நாடுகள், ஆப்பிரிக்காவுல இருந்தா ஆப்பிரிக்க ஐக்கிய நாடுகள்ன்னு பேரு வச்சுக்குவாங்களோ?   



0 comments:

Post a Comment