Friday, July 11, 2014


நாட்டுல இருக்கற புகை பிடிக்கற 20 கோடி மக்களைப் பார்த்து,  "புகைக்காதீங்க... புகை நமக்கு பகை" ன்னு சொல்ற அரசாங்கம், இங்க பத்துக்கும் குறைவா இருக்கற சிகரெட் கம்பெனிகளை மூடச் சொல்லலாமே? இவங்களுக்கு அந்த கம்பெனிகளோட வரியும் வேணும், அதே நேரத்துல நமக்கு "புகைக்காதீங்க" ன்னு அட்வைஸ் வேறே பண்ணுவாங்களாம்.  இப்படி விளம்பரப்படுத்த கோடிக்கணக்குல செலவு வேறே செய்வாங்களாம்.
 
அரசாங்கம் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான்.  வருமானம் மட்டும் தான் முக்கியம்ன்னு நினச்சா புகை பிடிக்க மக்களை ஊக்குவிக்கணும். அதிகமா சிகரெட் விற்பனையானால் அரசுக்கு வரி கிடைக்கும். இல்லன்னா, சிகரட் கம்பெனிகளை மூடணும். கோடிக்கணக்குல பணத்தை முதலீடு செய்து சிகரெட் கம்பெனியத் தொறந்தவனுக்கு, அவன் கிட்டேயே வரியை வாங்கிட்டு அவனுக்கே ஆப்பு அடிக்கற மாதிரி, புகையிலையை தவிர்ப்போம்ன்னு, அதையும் நம்ம வரிப்பணத்துல இருந்து பிரச்சாரம் செய்யவேண்டாமே ???

0 comments:

Post a Comment