Wednesday, July 09, 2014

மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுங்க சார்

ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் டூ வீலர் ஓட்ட வேண்டும் என்று நம்மிடம் கண்டிப்பு காட்டும் காவல்துறை, ஆட்டோ ஓட்டுனர்களிடம் மீட்டர் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று சொல்ல தயங்குவது ஏன்?

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு சங்கம் இருப்பதைப்போல டூ வீலர் ஒட்டுபவர்களுக்கும் ஒரு சங்கம் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா?

பெட்ரோல் விற்கும் விலையில் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்குவது சாத்தியமில்லை என சொல்லும் ஆட்டோ ஓட்டுனர்களே, ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். பக்கத்து மாநிலம் கேரளாவில் உள்ள ஆட்டோ கட்டணத்தை நம்மூரில் நீங்கள் வாங்கும் கட்டணத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். கேரளாவில் உள்ளதை விட பெட்ரோல் விலை தமிழகம், புதுச்சேரியில் குறைவு தான்.

மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்க சொல்லும் நீங்கள், ஒரு டீ கடைக்கு சென்றால் அங்கே டீ கடைக்காரர் உங்களிடம் ஒரு ரூபாய் அதிகமாக போட்டு கொடுக்க சொன்னால், நீங்கள் பெருந்தன்மையாக தருவீர்களா?

0 comments:

Post a Comment