Sunday, July 20, 2014

இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகள்

















இரவு நேரங்களில்  நடக்கும் சாலை விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலேயே நடக்கின்றன. மது அருந்த போகும்போது நடந்தா போக முடியும்? மது அருந்திவிட்டு வீட்டுக்கு போகணும்னா பைக் வேணுமே? நடக்கும் விபத்துகளுக்கு உண்மையான காரணம் drunk & drive தான். உட்கார்ந்து சாவகாசமாக குடிக்க இடம் கிடைப்பதால் தான் நிறைய பேருக்கு குடிக்கவே தோன்றுகிறது. மதுக் கடைகளில் bar  இல்லையென்றால் இப்படிப்பட்ட விபத்துகளைக் குறைக்க முடியும். 

அது அரசாங்கமோ அல்லது தனியாரோ, யார் மதுக்கடைகளை திறந்தாலும், யாரையும் கையைப் பிடிச்சு உள்ளே வாங்க வாங்கன்னு கூப்பிடறதில்லை. நம்ம சொந்த பொறுப்புல, விருப்பப்பட்டு தான் அங்கே போறோம். நம்ம பாதுகாப்புக்கு நாம் தான் உத்திரவாதம். நமக்கு தான் இருக்கணும் பொறுப்பு. அதை விட்டுட்டு அரசாங்கம் டாஸ்மாக் திறந்திருக்கிறது, அதனால நான் போயி குடிப்பேன்னு சொல்றது எப்படி இருக்குன்னா... "அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்னு"... சொல்றதுக்கு சமம். கடைசியில் வலியும் வேதனையும் யாருக்கு வரும்? இதை உணர்ந்தால் என்றென்றும் நலமே!

0 comments:

Post a Comment