ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில்
நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு
இருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு
நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும்
பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார்.
உடனே காமராஜர் அது என் தாய் தான்
என்று கூறினார். உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி வண்டியை ரிவர்சில்
எடுக்கச் சொன்னார். கார் அந்த மூதாட்டி அருகே வந்ததும் காரில் இருந்து
இறங்கி காமராஜரின் தாயாரின் (சிவகாமி அம்மாள்) கையை பிடித்து அந்த அற்புத
மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா? என்று பாசத்துடன் கேட்டார். இதை
அங்கு கூடி இருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இதைப்படிப்பவர்களுக்கு சற்று மனம் கனக்கவேண்டும். அந்த தன்னலமில்லா தலைவன்
வாழ்ந்த மண்ணில் தானே நாமும் வாழ்கிறோம் ???
0 comments:
Post a Comment